ஆண்கள் பெண்கள் என இன வேறுபாடு இல்லாமல் தாக்கும் ஒரு பாதிப்பு கருவளையம். கண்ணனுக்கு மை அழகு ன்னு சொல்லுவாங்க, ஆனால், இப்போது இருக்கும் சூழ்நிலையில் அனைவரும் வீட்டிலிருந்த படி அலுவலக வேலையை செய்து கொண்டிருப்பதால், கண்கள் பல அழுத்தங்களுக்கு உள்ளாகிறது. உடலில் உள்ள நரம்புகளிலேயே கண்ணில் உள்ள நரம்புகள் தான் மிகவும் மென்மையானவை அதனால் தான், உடலில் ஏதேனும் பாதிப்பு அடைந்தால் கண்கள் முதல் காட்டி கொடுத்து விடும்.

அதிக நேரம் கைபேசி, மற்றும் லேப்டாப் உபயோகப்படுத்துவதன் மூலம் கருவளையம் ஏற்படுகிறது. இது நம் அழகை பாதிக்கும். மற்றும் கண்ணின் பொலிவு தன்மையை இழக்க செய்யும். எனவே கருவளையத்தை எவ்வாறு நீக்குவது என பார்க்கலாம்.
மஞ்சள் மற்றும் உருளைக்கிழங்கு:

மஞ்சள் நம் உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது எனவே கஸ்தூரி மஞ்சளுடன் சிறிது உருளைக்கிழங்கு சாறு சேர்த்து இரவு கண்களுக்கு தேய்த்து விட்டு படுத்தால் நல்ல பலன் தரும். உருளைக்கிழங்கு சாறு கண்களில் உள்ள கருப்பு வளையத்தை நீக்கும்.
உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டி, கண்களில் வைத்து வர கருவளையம் நீங்கும்.
வைட்டமின் E:

வைட்டமின் E மாத்திரை சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து தரும். அதை கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து பூசி வந்தால், கருவளையம் நீங்கும்.
கடுக்காய் :

சித்த மருத்துவத்தில் கடுக்காய் கண் பாதுகாப்பிற்கு முதன்மையானதாக கருதப்படுகிறது. கடுக்காய் உரசி அதை சிறிது கஸ்தூரி மஞ்சள் மற்றும் பன்னீர் சேர்த்து கண்களில் பூசி வர கருவளையம் நீங்கும் கண்கள் வசீகரம் ஆகும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







