
வாயில் புண் வந்துவிட்டால் உணவு எடுத்துக் கொள்வது மட்டும் இன்றி தண்ணீர் குடிப்பது கூட கஷ்டமாக இருக்கும். காரசாரமான உணவுகள் , சில வகை மருந்துகள் , வெற்றிலை பழக்கம், வயிற்றில் புண் இருந்தால் இதன் காரணமாக வாயில் புண் தோன்றும். வாய்புண் குணமாக கைவைத்தியம் மூலம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சரி செய்யலாம்.
தேங்காய் பால் :
தேங்காயை மெல்லுவது புண்களை ஆற்றும். தேங்காயை அரைத்து பால் எடுத்து தேன் அல்லது வெல்லம் சேர்த்து பருகலாம்.
வீட்டில் தேன் இருந்தால் ஒரு கரண்டி தேங்காய் பாலில் சிறிதளவு தேன் சேர்த்து மிக்ஸ் செய்து வாயில் புண் உள்ள இடத்தில் பூசிவிடுங்கள்.
மணத்தக்காளி கீரை:
மணத்தக்காளி கீரையை வாயில் வைத்து மென்று அதன் சாறை விழுங்குவது கூட புண்களை ஆற்றும்.
மணத்தக்காளி கீரையை பாசிப்பருப்பு உடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம்.
வல்லாரை கீரை :
வல்லாரை கீரையை இடித்து அல்லது மிக்ஸியில் அரைத்து சிறிதளவு சாறு எடுத்து வாய்ப் புண்ணில் பூசினால் வாய் புண் குணமாகும்.

தேங்காய் எண்ணெய் :
தேங்காய் எண்ணெய் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் புண் குணமாகும்.
அகத்தி கீரை:
அகத்தி இலைகளை சிறியதாக அரிந்து சிறிது நெய் ஊற்றி வதக்கி சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாவதுடன் வாய்புண்ணும் குணமாகும்.
வெண்டைக்காய் :
இதை வாணலியில் நெய் விட்டு ஒரு நிமிடம் வதக்கி அப்படியே சாப்பிட்டால் வயிற்றுப் புண் மற்றும் வாய் புண் குணமாகும்.

நெல்லிக்காய்:
நெல்லிக்காயை அப்படியே வாயில் போட்டு சாப்பிட்டால் வயிற்றுப் புண்ணுடன் வாய்ப் புண்ணும் குணமாகிவிடும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







