கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மூல நோய் என்று அழைக்கப்படும் பைல்ஸ். மூல நோயானது ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள நரம்புகள் வீக்கமடைந்து புண்ணாவதால் ஏற்படும்.

மூலநோய்க்கான காரணங்கள் :
பரம்பரை, மலச்சிக்கல், நார்ச்சத்து குறைவான உணவு, அளவுக்கு அதிகமாக எடையை தூக்குதல், உணவு அலர்ஜி, உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான உடல் வெப்பம், கர்ப்பம் மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் அல்லது நின்று கொண்டிருத்தல்
மூல நோயின் வகைகள்
இந்த மூல நோயில் பல வகைகள் உள்ளன.அதில் பெரும்பாலும் இரண்டு வகைகளால் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
1.உள் மூலம் 2.வெளி மூலம்.
அறிகுறிகள்
மூலநோய் இருந்தால் ஆசன வாயில் கடுமையான வலி, மலம் கழிக்கும் போது இரத்த கசிவு, ஆசன வாயில் கடுமையான எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவற்றை சந்திக்கக்கூடும். இயற்கை வைத்தியம் மூலம் மூலநோய் ஆரம்பக்காலத்திலே குணப்படுத்தலாம்.

*ஐஸ்
பைல்ஸ் பிரச்சனைக்கு சிறந்த சிகிச்சை எனில் அது ஐஸ் தான். ஐஸ் கொண்டு அவ்விடத்தை ஒத்தடம் கொடுத்தால், இரத்த நாளங்கள் விரிவடைந்து, வீக்கம் குறைந்து, உடனடி நிவாரணம் கிடைக்கும். அதற்கு ஐஸ் கட்டிகளை துணியில் கட்டி, அதனைக் கொண்டு 10 நிமிடம் வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். நாள் முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.
*கற்றாழை
கற்றாழை உள்ளே இருக்கும் நுங்கு ஆசனவாயில் தடவி மெதுவாக மசாஜ் செய்து வந்தால், எரிச்சல் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
*ஆலிவ் ஆயில்
தினமும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் குடித்து வந்தால், அவை வீக்கத்தை குறைப்பதோடு, அதில் உள்ள மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், திசுக்களை சரிசெய்து, அதன் இயக்கத்தை அதிகரிக்கும். ஆலிவ் ஆயிலை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வரலாம்.
*முழு தானியங்கள் மற்றும் சிறுதானியங்கள்
மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், தானியங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஏனெனில் அதில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் மூலநோயில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு, இரத்த கசிவும் குறையும்.மேலும் தானியங்களில் உள்ள நார்ச்சத்து மலத்தை இலகுவாக்கி, எளிதில் வெளியேற்றுவதால், வலி குறையும் எனவே ஓட்ஸ், பார்லி, கைக்குத்தல் அரிசி, திணை , பச்சைப்பயறு போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்து வாருங்கள்.
*தண்ணீர்
மூலநோய்க்கு தண்ணீரை அதிக அளவில் குடிக்க வேண்டும். உடலில் போதிய அளவில் தண்ணீர் இருந்தால் தான், அவை குடலியக்கத்தில் பிரச்சனையை ஏற்படுத்தாமல், மலம் எளிதாக வெளியேற உதவி புரியும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







