உலகில் வயது வந்தோரில் மூன்றில் ஒரு பகுதியில் உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். க்ரீன் அல்லது பிளாக் டீ குடிப்பதால் இரத்த அழுத்தத்தை ஓரளவு குறைக்க உதவுகிறது என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. ஏனெனில் இந்த டீயில் கேட்டன்சிகள் என்னும் பினோலிக் கலவைகள் உள்ளன. இது உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க முக்கிய பங்களிக்கிறது.

குறிப்பாக பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை ஆரோக்கியமாக பராமரிப்பதில் முக்கிய பங்களிக்கிறது. ஆகவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் பொட்டாசியம் கலந்த உணவுகளை உண்பது மிகவும் நல்லது. இதனால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
உலர்ந்த ஆப்ரிகாட்:

உலர்ந்த ஆப்ரிகாட் அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான பொருட்களில் ஒன்றாகும். இந்த உலர் பழத்தை சாப்பிட்டால் இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. 6 உலர்ந்த ஆப்ரிகாட் பழத்தில் 488 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது.
பசலைக்கீரை:

பசலைக்கீரையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. அதோடு இதில் வைட்டமின் ஏ , சி மற்றும் கே போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஒரு கப் பசலைக்கீரை நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியிருக்க செய்து, உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
இளநீர்:

இளநீர் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பானம் மட்டுமின்றி இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவக்கூடியது. இளநீர் குடித்தால் பல்வேறு ஊட்டச்சத்துக்களை அளிப்பது மற்றுமின்றி உடலை நீரோட்டத்துடனும் வைக்கக்கூடியது, மேலும் நம் உடலுக்கு தேவையான பொட்டாசியத்தை இது தருகிறது.
தர்பூசணி:

கோடையில் ஒருபோதும் இந்த பழத்தை சாப்பிட தவறக்கூடாது, ஏனெனில் இதில் அதிகளவிலான நீர்ச்சத்து மற்றும் அதிகளவிலான பொட்டாசியமும் இதில் உள்ளது. தர்பூசணி பொதுவாக உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மையை தரக்கூடியது.
உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு என இரண்டிலுமே பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது, மற்றும் இவை உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
மாதுளை:

மாதுளையில் அதிகளவிலான பொட்டாசியம், வைட்டமின் சி , கே மற்றும் ஃபோலேட் சத்துக்களும் உள்ளன. இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இது உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு நம் உடலை ஆரோக்கியமா வைத்திருக்கவும் உதவுகிறது.
வாழைப்பழம்:

இதில் பொட்டாசியம் ஏராளமான அளவில் உள்ளதால் இரத்த அழுத்தத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. தினமும் வாழைப்பழத்தை ஒருவர் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்த பிரச்சனையைத் தவிர்க்கலாம்.
பூண்டு:
பூண்டுகளில் ஆன்டி-ஹைப்பர்டென்சிவ் பண்புகள் உள்ளன. இதில் உள்ள அல்லிசின் என்னும் சல்பர் பொருள் தான் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. சில ஆய்வுகளில் பூண்டு இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரைகளைப் போலவே செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளன.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







