உடல்நலம் – இதயம் நுரையீரல் செயல் இழந்தாலும் செயற்கை நுரையீரலாக செயல்படுத்த முடியுமா?எக்மோ சிகிச்சை

எக்மோ சிகிச்சை என்பது மிகவும் உயர்தர சிகிச்சையில் ஒன்று. கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் இது உயர் சிகிச்சையாக கருதப்படுகிறது. பெரிய மருத்துவமனைகளில் மட்டுமே அதற்கான வசதிகள் மற்றும் எக்மோ கருவிகளின் விலை மிகவும் அதிகம் என கூறப்படுகிறது. இந்த சிகிச்சையை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

எக்மோ கருவி:


Extra corporeal membrane oxygenation என்பதன் சுருக்கமே ECMO என்று அழைக்கப்படுகிறது. ஆக்ஸிஜன் செலுத்தப்பட்ட நிலையிலும் கூட, மூச்சுவிட முடியாத நிலையில், மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருந்தால், செயற்கையாக மூச்சுவிட தூண்டப்படும் கருவிதான் எக்மோ.

எப்படி செயல்படும்:

மூச்சுக் காற்றிலிருந்து கார்பன் டை ஆக்ஸைடைப் பிரித்து, ஆக்ஸிஜனை இரத்தத்தில் கலக்கும் சுத்திகரிப்பு வேலையைத் தான் பொதுவாக நம்முடைய நுரையீரல் செய்கிறது. தீவிர மூச்சுத் திணறல் மற்றும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையிறல் மற்றும் இதயம் முழுமையாக செயல்படாதபோது, நுரையீரலின் வேலையான சுத்திகரிப்பை எக்மோ கருவி செய்யும். அதன்பின்னர் சுத்தமான ஆக்சிஜனை  நுரையீரலுக்கு அனுப்பப்படுகிறது.

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது எப்போது?  ஏன்?

கொரோனா நோயாளிகளுக்கு மூச்சை சீராக்குவது முதல் தேவையாக இருக்கிறது. அந்த வகையில், கொரோனா சிகிச்சையில் எக்மோ கருவி சிறப்பாக உதவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸின் முகம் முதன்முதலாக உலகத்துக்கு தெரிய வந்தது. ஆனால், மார்ச் மாதத்துக்குப் பிறகே உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது. உலகெங்கிலும் இந்நோயின் தீவிரத்தால் உயிரிழப்புகள் அதிகரித்த அந்த சூழலில்தான் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சீன மருத்துவர்கள் இந்த செயற்கை சுவாச முறையைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கத் தொடங்கினார்கள். 

எப்போது இந்த சிகிச்சை தேவைப்படும்?

இதயமும் நுரையீரலும் நம்முடைய உடலுக்குள் இருந்துகொண்டு செய்யும் வேலைகளை உடலுக்கு வெளியே இருந்து செயற்கையாக இந்த கருவி செய்யும். இந்தக் கருவி பொருத்தப்பட்டிருக்கும் போதே இதயம் மற்றும் நுரையீரலின் இயற்கையான செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையிலான அடுத்தக் கட்ட சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும். இது பலனளிக்காத பட்சத்தில்தான் இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படும்.

யாருக்கு அதிகம் இந்த கருவி பயன்படும்?

இதயம், நுரையீரல் இரண்டுமே முறையாக செயல்பட ரத்தமும் ஆக்சிஜனும் மிக அவசியம், சில சமயங்களில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகள் சுவாசிக்க ஏதுவாக தேவையான ரத்தத்தைச் செலுத்துவதும், பொறுத்தப்படுவதும் உண்டு. 

கவனிக்க வேண்டியது என்ன?

எக்மோ கருவிகளை தேர்ந்த நுரையீரல் மருத்துவ நிபுணர்களைக் கொண்டு தான் பொறுத்தப்படவும் கண்காணிக்கப்படவும் வேண்டும். தேவையில்லாத சமயங்களில் இதை உபயோகப்படுத்தப்பட்டால் நரம்புகளைப் பாதிக்கும் வாய்ப்பு மிக அதிகம் என்பதால், இந்த கருவியை உபயோகிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.   

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course