அமெரிக்கக் குழந்தைநல மருத்துவர்கள் சங்கம் (American Academy of pediatrics), குழந்தைகளுக்கான பவுடர் பயன்படுத்துவது நல்லதல்ல என்று கூறியுள்ளது. பவுடரில் உள்ள மிகவும் நுண்ணிய துகள்கள், சுவாசக் கோளாறுகளையும், ஆபத்தான நுரையீரல் பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும் என்கின்றனர். பவுடரின் நுண்ணிய துகள்கள் சுவாசம் வழியாக, நுரையீரலைச் சென்று சேர்ந்துவிடும். குறைமாதக் குழந்தைகள், பிறவி இதயக் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் சுவாசக் கோளாறு உள்ள குழந்தைகளுக்கு, மிகவும் குறைந்த அளவு பவுடர் கூட நுரையீரலில் ஒவ்வாமையை ஏற்படுத்தி பாதிப்பை உண்டாக்கலாம்.

தாய்மார்கள் கவனிக்க வேண்டியவை:
*குழந்தைகளுக்கு மிகவும் குறைவாக பவுடர் பயன்படுத்த வேண்டும்.
*வெளியே செல்லும் போது மட்டும் பவுடர் போடுவது என்று வழக்கப்படுத்திக் கொள்ளலாம்.
*குழந்தைகள் தாங்களாகவே பவுடர் போடுவதைத் தடுக்க வேண்டும்.
*வீட்டில் பவுடர் டப்பாவை கைக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும்.
*குழந்தைகளின் உடலில் ஏற்கெனவே படிந்துள்ள பவுடரை துடைத்து எடுக்காமல், மேலும் மேலும் பவுடர் போடுவதைத் தவிர்க்கவும்.

கைக்குழந்தைகளுக்கு பவுடர் போடும் போது கவனிக்க வேண்டியவை:
*குழந்தைக்கு ஒவ்வொருமுறையும், டயாப்பர் (Diaper) மாற்றும்போது ஏற்கெனவே தசை மடிப்புகளில் பூசியிருக்கும் பவுடரைத் துடைத்து எடுத்துவிடவும்.
* குளிக்க வைக்கும் போது குழந்தையின் தோல் மடிப்புகளில் இருக்கும் பவுடரை, நன்றாகத் துடைத்து எடுக்கவும்.
* பெண் குழந்தைகளுக்குப் பிறப்புறுப்பில் பவுடர் செல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
*ஒவ்வாமை குறைவான (Hypo Allergenic) அல்லது ஆர்கானிக் முறையில் தயாரித்த பவுடர்களைப் பயன்படுத்துவதே நல்லது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







