
வைட்டமின் சி நிறைந்த பச்சை நிற பெட்டகமே நெல்லிக்காய். ஆயுர்வேத , சித்த மருத்துவ முறைகளில் மருந்தாக நெல்லிக்காய் பயன்பாட்டில் உள்ளது.
வைட்டமின் ஏ மற்றும் பி ஆகியவையும் நிறைந்துள்ளன. கால்சியம் , பாஸ்பரஸ் , இரும்புச்சத்து என சத்துகளின் களஞ்சியமாக இருக்கிறது . நெல்லிக்காய் மற்றும் நெல்லிப்பொடியாக கைவைத்தியமாக பல்வேறு மருத்துவ குறிப்புகள் நம்மிடையே உண்டு.
எடை குறைப்பு டயட்டில் நெல்லிக்காயை பரிந்துரைக்காத மருத்துவக் குறிப்புகள் இருக்க வாய்ப்பு இல்லை. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை எரிப்பதில் நெல்லிக்கனி முதலிடம் வகிக்கிறது.
புளிப்பும், துவர்ப்பும் கலந்த இந்த கனியானது சருமம் , கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது.
நெல்லிக்காய் டீ செய்முறை ( Amla tea)
ஒன்றேகால் தம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும் . அதில் ஒரு டீஸ்பூன் அளவு நெல்லிக்காய் பொடியை சேர்த்து கொள்ளவும். இதனுடன் இஞ்சி துருவல்களையும் சேர்த்து கொதிக்க விடவும். இதனை வடிகட்டி குடிக்கும் சூட்டில் சுத்தமான தேன் கலந்து பருகலாம். செய்வதற்க்கு சுலபமும் குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய தயாரிப்பு ஆனால் பலனோ மிகுதி.

நெல்லிக்காய் டீ பலன்கள்
வெறும் வயிற்றில் நெல்லிக்காய் டீயை குடிப்பதால் , நம் உடலில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
*வளர்சிதை (metabolism) மாற்றங்களை தூண்டுகிறது.
*புரதத்தயாரிப்பை (protein synthesis) துரிதப்படுத்துகிறது.
*உடலுக்கு புத்துணர்வு தருகிறது
*உடலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றும்.
* தினசரி நெல்லிக்காய் எடுத்துக் கொள்ளும் போது உடலுக்கு தேவையான அளவு விட்டமின் சி மற்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் போது உடலின் ஆரோக்கியம் மேம்படும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







