சீரக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நோய் எதிர்ப்பு நன்மைகள் மற்றும் பயன்கள்!!

மருத்துவ ஆய்வுகளில் சீரக தண்ணீர் குடிப்பதால்  பெரும்பாலும் உடல் உபாதைகளை தடுக்கிறது. இளைஞர்களின் உணவு பழக்கம் ரொம்பவே மாறிவிட்டது. அவர்கள் துரித உணவுகள், எண்ணெய் பலகாரங்களை விரும்பி சாப்பிடுகிறார்கள். 

அதே சமயம், நேரம் தவறியும் சாப்பிடும் பழக்கத்தை பழகியிருக்கிறார்கள். இந்த முறையில்லாத உணவு பழக்கத்தினால் இளைஞர்கள் பல உடல் உபாதைகளை சந்திக்கிறார்கள்.

வயிற்று பிரச்சனைகளை போக்குகிறது:

மேலும், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும்  சீரக தண்ணீர் பருகும் பழக்கத்தையும் பழகிக்கொள்ளவேண்டும். ஏனெனில் சீரக தண்ணீரை தொடர்ந்து பருகுவதால், பல்வேறு உடல்நல பிரச்சனைகளை போக்கிவிடலாம். அது வயிற்று ஆரோக்கியத்துக்கும் நலம் சேர்க்கும்.

 

 

அஜீரண கோளாறு பிரச்சனைகளை தீர்க்கும்:

பெரும்பாலும் உணவுகளால் அனைவருக்கும் ஏற்படும் அஜீரண கோளாறு, அசிடிட்டி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் வராமலும் தற்காத்துக்கொள்ள உதவும். சீரக தண்ணீர் சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். வயிற்று வலிக்கு நிவாரணம் தரும்.

 

 

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகையில், வெறும் வயிற்றில் நாம்  சீரக தண்ணீரை பருகி வந்தால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். சீரக தண்ணீரில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அது உடல் இயக்க செயல்பாட்டிற்கு துணை புரியும். இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்தவும் உதவும்.  கொரோனா அச்சுறுத்தலில் மிக முக்கியமானதான சுவாச அமைப்பு சீராக செயல்படுவதற்கும் உதவுகிறது.

கல்லீரலுக்கு நல்லது:

நாம் நாள்தோறும் காலையில் ஒரு டம்ளர் சீரக தண்ணீர் பருகிவந்தால் சுவாசம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். சீரக தண்ணீர் கல்லீரலுக்கும் நல்லது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்ற உதவும். இளம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கு அருமருந்தாகவும் அமையும்.

 

முகத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கும்:

சீரகத்தில் மிகச்சிறந்த ஊட்டச்சத்துக்களான  பொட்டாசியம், கால்சியம், செலினியம், மெக்னீசியம், இரும்பு சத்து, நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. அவை சரும ஆரோக்கியத்தை பளிச்சிட வைக்கும். சீரகத்தில் இருக்கும் வைட்டமின்-ஈ, முகத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கும். சீரகத்தில் இருக்கும் சத்துக்கள் கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் துணை புரியும்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women