தாய்ப்பாலை நிறுத்தி இணை உணவு ஆரம்பித்ததும் இளம்தாய்களுக்கு பெரும் கவலை தரும் விஷயம் சத்துள்ள அதேசமயம் குழந்தை விரும்பி உண்ணும் வகையில் இணை உணவு தயாரிப்பது என்பது தான். புதுவிதமாகவும் , ருசியாகவும் அரிசிப்பொரி , அவல் … போன்றவற்றில் இருந்து கூழ் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
எட்டு மாதங்களுக்கு பிறகு குழந்தைகளுக்கு இணை உணவு கொடுக்கலாம்.

அரிசிப்பொரி கூழ் :
அரிசிப்பொரி – 1 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் -1
செய்முறை :
* வாணலியில் எண்ணெய் விடாமல் அரிசிப்பொரியை வறுத்து எடுக்கவும்.
* அதே வாணலியில் பொட்டுக்கடலை மற்றும் ஏலக்காய் சேர்த்து சூடாக்கவும்.
* மிக்ஸியில் வறுத்த பொருட்களை போட்டு நைசாக அரைக்கவும்.
* அரைத்த பவுடரில் தேவையான அளவு சுடு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.இனிப்பு தேவையெனில் சிறிது சேர்த்துக் கொள்ளவும். குழந்தைகள் வித்தியாசமான சுவையில் விரும்பி உண்ணும்.

அவல் கூழ் :
சிவப்பு அவல் – 1 டேபிள் ஸ்பூன்
பாதாம் பருப்பு – 5
முந்திரிப்பருப்பு -5
ஏலக்காய் -1
செய்முறை :
* சிவப்பு நிற கைக்குத்தல் அரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அவலைப்போட்டு சூடாக்கவும். பிறகு இதனை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
* அதே பாத்திரத்தில் பாதாம் பருப்பு , முந்திரிப் பருப்பு சேர்த்து சூடாக்கவும்.மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும்.
* தனித்தனியாக அரைத்த அவல் மற்றும் பாதாம் , முந்திரி பொடிகளை ஒன்றாக கலந்து கொள்ளவும். பிறகு இவற்றை நன்கு சலித்துக் கொள்ளவும்.
* தேவையான அளவு சூடான தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும்.இனிப்புச் சுவை தேவையெனில் பேரிச்சம் பழ சிரப்பை சேர்த்துக் கொள்ளலாம்.
தினமும் ஒரு சுவையை அறிமுகப்படுத்தும் போது குழந்தைகள் மிகவும் ஆர்வமாக உண்பார்கள்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







