இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை பாதிப்பு அதிகமாக உள்ளது. அந்த நோயின் லேசான அறிகுறி தென்பட்டால் கூட உடனே சி.டி. ஸ்கேன் எடுக்கும் வழக்கம் நம் மக்களிடையே பரவலாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

மருத்துவர்கள் அறிவுறுத்துவது:
கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் பகுதியளவு ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்குககளை அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா நோய்த்தொற்றை கண்டறிய சி.டி.ஸ்கேன் எடுப்பது வழக்கம். மிகவும் குறைவான நோய் தொற்று பாதிப்புக்காக ஸ்கேன் செய்வதில் எந்த பலனும் இல்லை. இது இதயத்திற்கு மிகவும் கெடுதல் ஆகவே தேவையின்றி அடிக்கடி சி.டி. ஸ்கேன் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என நம் நாட்டு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஒரு சி.டி. ஸ்கேன் 300 மார்பு எக்ஸ்ரேக்களுக்கு சமம் என்பதால் அறிகுறிகளுக்கு சி.டி. ஸ்கேன் எடுப்பது ஆபத்தானது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறி உள்ளார்.
அடிக்கடி சி.டி. ஸ்கேன் செய்தல் புற்றுநோய் வரும்:
கொரோனா நோய்த்தொற்றின் மிகச்சிறிய அறிகுறிகளுக்காக சி.டி. ஸ்கேன் தவறாக பயன்படுத்தப்படுகிறது. சி.டி. ஸ்கேன் அதிகமாக பயன்படுத்துவதால் கதிர்வீச்சின் வெளிப்பாடு அதிகரிக்கிறது. இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதயத்திற்கு கெடுதலா:
மிகச்சிறிய கொரோனா தொற்று பாதிப்புக்காக ஸ்கேன் செய்வதில் எந்த பலனும் இல்லை. நிறைய பேர் சி.டி. செய்வதே முக்கியம் என்று கருதுகிறார்கள். லேசான தொற்று இருப்பது தெரிய வரும்போது வீட்டு தனிமையில் இருப்பதே நல்லது. ஒரு சி.டி. ஸ்கேன் 300 மார்பு எக்ஸ்ரேக்களுக்கு சரிசமம் என்பதால் தேவையின்றி அடிக்கடி சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டாம் என மக்களுக்கு அனைத்து மருத்துவர்களும் பரிந்துரைக்க வேண்டும்.

ஆக்சிஜன் அளவு:
மிகச்சிறிய கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு ஆக்சிஜன் அளவு சீராக இருக்கும் நிலையில், சிடி-ஸ்கேன் எடுப்பது அவசியமே இல்லை என விளக்கம் அளித்துள்ளார். மேலும், அறிகுறிகள் இன்றி லேசான கொரோனா பாதிப்புக்கு ஆளனவா்களுக்கு, சிடி-ஸ்கேனில் தென்படும் பாதிப்புகள் மருத்துவ சிகிச்சை இன்றி தானகவே சரியாகிவிடும் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

ரத்தப் பரிசோதனைகள்:
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு பாதிப்பு உடையவா்கள் மட்டுமே சிடி-ஸ்கேன் எடுக்க வேண்டும். சந்தேகம் இருந்தால், அவா்களுக்கு மார்புப் பகுதி எக்ஸ்-ரே எடுப்பதும் போதுமானதாக இருக்கும்.அதுபோல, உயா் காய்ச்சல் இல்லாத, ஆக்சிஜன் அளவு சீராக இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு உயிரி குறியீட்டுக்காக ஏராளமான ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டாம்.

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள்:
மிதமான கொரோனா பாதிப்பு உடையவா்களுக்கு மருந்துகள்கூட தேவையில்லை என்று சிகிச்சை நடைமுறை வழிகாட்டுதல்கள் தெளிவுபடுத்துகின்றன. தேவைப்பட்டால் இவா்மெக்டின் அல்லது ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். அதையும் அதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை எனவும் ரண்தீப் குலேரியா கூறினார்.

Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







