நாம் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு அதிக நன்மைகள் ஏற்படும் என்பது உண்மைதான். இரவு உணவுக்கு பின் தண்ணீர் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

இரவில் சிறுநீரக செயல்பாடுகள் மெதுவாக நடக்கும். அப்போது நீர் அருந்தினால் தூக்கமின்மையும், காலையில் எழுந்தவுடன் முகம் சிறிது வீக்கத்துடன் காணப்படும். மேலும் உடல் எடையை குறைக்க விரும்புவோர் உடற்பயிற்சி மேற்கொண்டு விட்டு நீர் அருந்துவதால் உடலின் தட்ப வெப்பம் உயர்ந்து மயக்கத்தை ஏற்படுத்தும்.
குளிர் பானங்கள், ஐஸ்கிரீம்கள் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது. அவ்வாறு குடிப்பதால் வயிற்றில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் காரணமான உணவுகளை உண்ட பிறகு நீர் அருந்த கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.







