குதிரைகளில்  கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்

 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதியில் லிங்கவாடி மலை உச்சியில் மலையூர் கிராமம் அடங்கிய  402 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. கரடு முரடான மலைப்பாதையை கொண்ட இந்த கிராமத்திற்கு சாலை வசதி கிடையாது. முளையூர்-எல்லைப்பாறை மலை அடிவாரத்தில் இருந்து 4 கிலோமீட்டர் மலைப்பாதையில் பயணித்தால் மலையூர் கிராமத்தை சென்றடையலாம். இங்கு நேற்று வாக்குப்பதிவு எந்திரங்கள் குதிரைகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி 3 குதிரைகள் மூலம் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள், எழுது பொருட்கள் அடங்கிய பெட்டிகள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. 

 

மேலும் , இங்கு பணியில் ஈடுபடுகிற 4 தேர்தல் உதவி அலுவலர்கள், 4 போலீஸ்காரர்கள் ஆகியோரும் மலைப்பாதையில் நடந்தே சென்றனர். 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas