பல இடங்களில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தேனி மாவட்டம் கம்பம் கூடலூர் சாலையில் உள்ள நந்தனார் காலனியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். லோகநாதன் மகனுக்கு திருமணம் முடிந்து குடும்பத்தோடு கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் பற்றி போலீசில் புகார் அளித்தார் லோகநாதன், இது பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, துணைக்காவல் கண்காணிப்பாளர் நா.சின்னக்கண்ணு ஆகியோர் தனிப்படை அமைத்து, கொள்ளையர்களை பிடிக்க உத்தரவிட்டனர். இந்நிலையில், திங்கட்கிழமை அதிகாலை தெற்கு காவல் ஆய்வாளர்கள் கம்பம் கூடலூர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சிலர் வாகன தணிக்கையை பார்த்ததும் தப்பி ஓடினர். அவர்களை விரட்டி பிடித்த போலீசார் விசாரணை செய்தனர்.
விசாரணையில் காமாட்சிபுரம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அய்யப்பன் மகன் சக்திவேல் என்றும், நந்தனார் காலனியில் லோகநாதன் வீட்டில் நகை பணம் திருடியதும் தெரியவந்தது. போலீசார் அவரிடம் இருந்த 7 பவுன் தங்க நகைகளை மீட்டு, உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் மன்றம் மூலம் சிறையில் அடைத்தனர். மேலும், தப்பி ஓடிய சக்திவேலின் அண்ணனையும் தேடி வருகின்றனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







