தனியார் மருத்துவமனைகளில் அரசு காப்பீட்டு திட்ட அட்டை ஏற்காவிட்டால் நடவடிக்கை – அமைச்சர் சாமிநாதன்

தனியார் மருத்துவமனைகளில் உரிய ஆவணங்களுடன் அரசு காப்பீட்டு திட்ட அட்டை வைக்கப்பட்டிருந்தும்  ஏற்றுக் கொள்ளவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தனியார் மருத்துவமனைகளில்  சிகிச்சை மேற்கொண்டு, இறுதி கட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள். இது தொடர்பாக மூன்று மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறுகள் திருத்தப்படும். இந்த  கொரோனா நேரத்தில் பொருளாதாரத்தை சுரண்டும் வகையில், தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலிப்பது தவறானது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் உரிய ஆவணங்களுடன் அரசு காப்பீட்டு திட்ட அட்டை வைக்கப்பட்டிருந்தம்  ஏற்றுக் கொள்ளவில்லைய எனில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கொரோனா  தொற்றுக்கு கடந்த 4 நாட்களில் 5 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தார்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course