ரோஜா பூ லேசான துவர்ப்புச் சுவையுடையது. ரோஜா இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டவை. ரோஜா இதழ்களை சாப்பிட்டால் வயிற்றிலுள்ள வாயுக்களை வெளியேற்றும்.
எல்லாவித ரோஜாக்களும் மருந்தாக பயன்படுவதில்லை. நாட்டு ரோஜா அல்லது பன்னீர் ரோஜா எனப்படும் எட்வர்ட் ரோஜாக்கள் தான் ரோஜா அத்தர் , குல்கந்து , ரோஸ் வாட்டர் தயாரிக்கப் பயன்படுகிறது.
ரோஜா இதழ்களில் 90% நீரும் , மாலிக் அமிலம், பெக்டின் மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. குறைந்த கலோரி மதிப்பு உடையது.இதில் விட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. பெர்ஷிய , மொராக்கோ உணவுகளில் ரோஜா சிரப் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது.
ரோஜாவின் மருத்துவ பலன்கள்:
* ரோஜா இதழ்களை வெந்நீரில் போட்டு அதனை வடிகட்டி தேன் கலந்து குடிக்கலாம். இதனை குடிப்பதால் செரிமானத்தை தூண்டுகிறது மேலும் வயிற்றில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது இதனால் வாயுத்தொல்லையால் வரும் பிரச்சினைகள் தீருகின்றது.
*ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு டம்ளர் தண்ணீர்விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி சிறிதளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலையிலும் குடித்து வந்தால் மலச்சிக்கல் விலகும். மூலச்சூடு தணியும்.
*ரோஜா மொட்டுகளில் ஒரு கை அளவு எடுத்துக்கொண்டு அதை அரைத்து, கெட்டியான தயிரில் போட்டுக் கலக்கி, காலையில் குடித்து வர வேண்டும். சீதபேதிக்கு சிறந்த மருந்து.
*சுத்தம் செய்த ரோஜா இதழ்கள், கால் கிலோ எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு 150 கிராம் சுத்தமான தேனை அதில்விட்டு நன்றாக கிளறி வெயிலில் வைத்து விட வேண்டும். ரோஜா குல்கந்து என்ற பெயரில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.இதனை காலை , இரவு என இருவேளையும் சாப்பிடலாம்.
குறிப்பு : பூச்சி மருந்து அடிக்காது மலர்ந்த மலர் என்பதை உறுதி செய்து பிறகு அந்த ரோஜா இதழ்களை பயன்படுத்தலாம்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News