
சிவகங்கை அருகே அலுபிள்ளைதாங்கி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. அவரது மகன் சாமிநாதன். கருப்பையாக்கும் உடன் பிறந்த சகோதரிக்கும் சொத்து தகராறு இருந்து வந்த நிலையில், கருப்பையா வளர்த்து வந்த ஆடுகளை சகோதரி வீட்டின் நாய் கடித்து குதறியுள்ளது. இதனால் கருப்பையாவும் அவரது மகன் சாமிநாதனும் சகோதரி வீட்டுக்கு சென்று சண்டை போட்டுள்ளனர்.
அதன்பிறகு கருப்பையா சகோதரியின் மகன்களான தாமோதரன், சுந்தர்ராஜ், சிங்கராஜ், திரிசங்கு ஆகியோர் ஆடுமேய்த்துக்கொண்டிருந்த கருப்பையா மற்றும் அவரது மகன் சாமிநாதனிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் தாங்கள் வைத்திருந்த அரிவாளால், கருப்பையாவையும், மகன் சாமிநாதனையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்பு தப்பியோடிய கொலையாளிகள் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் ,அந்த மூன்று குற்றவாளிகளும் திருப்புவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.






