தஞ்சாவூரில் கண்ணீர் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள மேல மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் திருவோணம் அருகே உள்ள மேல மேட்டுப்பட்டி நெடுஞ்சாலையில் மறைந்த தந்தைகாக பேனர் வைத்துள்ளார்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அம்மணிப்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜயராணி என்பவர் அந்த வழியாக வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டு சென்று கொண்டிருந்தார். மேட்டுப்பட்டு அருகே வந்தபோது ரவிச்சந்திரன் வைத்திருந்த பேனர் விஜயராணி மீது சரிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே பேனரை கைப்பற்றிய போலீசார் அதனை வைத்த ரவிச்சந்திரனை கைது செய்தனர். சாலையோரங்களில் பேனர் வைக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை கடைபிடிக்காத உள்ளாட்சி, ஊராட்சி மற்றும் வருவாய் துறையின் அலட்சியத்தால் இதுபோன்ற விபத்திற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







