வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்

 வேதாந்தா நிறுவனத்தின் மீதும் அதன் இயக்குனர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் வேண்டுகோள். மே 22 ஸ்டெர்லைட் படுகொலை நாளை  முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது . 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கமும் அதனுடன் இணைந்து செயல்படும் அமைப்புகளும் மே 22-ல் நடைபெற்ற ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு படுகொலைகளை நினைவு கூறும் விதமாக, அந்த நாளை வேதாந்தா நிறுவனத்துக்கு எதிரான உலகளாவிய செயல்பாட்டு நாளாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அமைந்துள்ள புதிய அரசு வேதாந்தா நிறுவனத்தின் மீதும் அதன் இயக்குனர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் அந்த இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 2018 மே 22 நாளன்றும் அதற்கு பிறகும் காவல்துறையால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை விரைவுபடுத்த வேண்டும் எனவும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course