
அதிகரித்து வரும் செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்கள். கடந்த 9ஆம் தேதி சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பெண் கீதா என்பவர் காலையில் அவரது வீட்டு வாசலில் உள்ள விநாயகர் சிலையை கும்பிடும் போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த மார்ப நபர்களால் சங்கிலி பறிப்பு முயற்சி நடந்துள்ளது. சாமி கும்பிட்டு கொண்டிருந்த கீதாவை கீழே தள்ளி அவர் கழுத்தில் இருந்த 11 பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர்.
கீதாவை கீழே தள்ளி சிறிது தூரம் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். ஆனால் கீதா அவரது தாலி சங்கிலியை கெட்டியாக பிடித்து கொண்டிருதாதல் அவர் சத்தம் போடா அருகில் இருந்தவர்கள் வந்ததும் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு திருடர்களும் அவர்களின் முயற்சியை கை விட்டனர்.
இதனை அடுத்து சிசிடிவி மூலம் அந்த திருடர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மதுரையை சேர்ந்த தினேஷ் குமார் மற்றும் வாகனம் ஒட்டி வந்த நபர் கிரண் குமார் ஆகும். இவர்கள் மீது மதுரையில் கொலை வழக்கு உள்ளதோடு சென்னையில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். தற்போது இவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இவர்களுக்கு உதவிய தேனியை சேர்ந்த கார்த்திக், விஜய், தினேஷ் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். பெரும்பாலான திருடர்கள் பெண்கள் காலையில் சாமி கும்பிடும் போது வாசலில் கோலம் போடுபவர்களை தான் குறிவைக்கின்றனர்.

அதை தொடர்ந்து, பல்லாவரம் சங்கிலி பறிப்பு தடைபட்டதால் குரோம்பேட்டை,பெரவள்ளூரில் மேலும் 3 பேரிடம் சங்கிலியை பறித்துள்ளனர். அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும் அங்குள்ளவர்களிடம் புதிய நட்பு கொண்டு வழிப்பறியும் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்தவர்களிடம் இருந்து 4 பவுன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







