நாளை முதலமைச்சராக பதவி ஏற்கிறார் – மு.க.ஸ்டாலின்

நாளை தமிழக முதலமைச்சராக  மு.க ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் ஆளுநர் மாளிகையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. தி.மு.க நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் 125  தொகுதிகள், மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 8 பேர் என 133 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தி மு க தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின், 133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சியமைக்க நேற்று ஆளுநர்  பன்வாரிலால் புரோகித்தையிடம்  உரிமை கோரினார்.


நாளை காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில்  நடைபெறும் பதவியேற்பு விழாவில், மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார். முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு.க ஸ்டாலின் அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அவருடன், 28 அமைச்சர்கள் பதயேற்க உள்ளனர்.தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய் பரவல் காரணமாக, பதவியேற்பு விழா எளிமையாக நடத்தப்பட உள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், விழாவில் பங்கேற்க குறைந்த நபர்களை மட்டும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை தமிழக முதலமைச்சராக  மு.க ஸ்டாலின் பதவி ஏற்க இருப்பதால், முதலமைச்சர் அறை மற்றும் வளாகத்தை பூசி புணரமைக்கும் பணிகள் தலைலமைச்செயலகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதையொட்டி முதலமைச்சர் அறை மற்றும் வளாகத்தை பூசி புணரமைக்கும் பணிகள் அதிகாரிகள் மேற்பார்வையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

மு.க.ஸ்டாலின் நாளை முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் நிலையில், அவர் மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதனை தொடர்ந்து , சைதாப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் தியாகராயநகரில் ஆர் எம் வீரப்பனிடம் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்புகளின் போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு முதன்மை செயலாளர் கே என்.நேரு மற்றும் பொன்முடி ஆகியோரும் உடன் இருந்தனர். 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course