திருச்சியில் வழக்கறிஞர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி கண்ணன். வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த அவர் நேற்றிரவு வீட்டின் அருகே அவரது குழந்தைக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, திடீரென அவரை சுற்றி வளைத்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக தாக்கியது.

இதில் கோபி கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் தலைமறைவான அந்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







