ஒருதலை காதலால் நேர்ந்த சோகம் – பெண்ணை நடுரோட்டில் குத்திக்கொலை செய்த வாலிபர் 

 

 

துமகூரு மாவட்டம் ஷிரா தாலுகா தொட்டகொலோ கிராமத்தை சேர்ந்தவர் ஈரண்ணா (25). இவர் தொட்டகொலே கிராமத்தை சேர்ந்த காவியா என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

காவியா கல்லூரிக்கு செல்லும் போது பின் தொடர்ந்து செல்லும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். ஒருநாள் இவ்வாறு  பின்தொடரும் போது காவியாவை மடக்கி கையில் தாலியை வைத்து கொண்டு பேசியுள்ளார். தாலியை  கட்டுவதற்கும் முயற்சி செய்துள்ளார். 

இதனை பிடிக்காமல் தப்பியோடிய காவியாவை பின்தொடர்ந்து சென்று கையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார்.

இதனால் சம்பவ இடத்திலேயே காவியா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலையை தொடர்ந்து ஈரண்ணா தப்பியோடிவிட்டார். பிறகு வழக்கு பதிவு செய்த கல்லம்பெல்லா போலீசார் ஈரண்ணாவை தேடி வந்தனர்.

 இந்நிலையில் நேற்று அவர் ஹக்கலூரு கெரே அருகே தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் விசாரணையில் அவர் கொடுத்த தகவலின் பேரில் கொலைக்கு பயன்படுத்திய கத்தி, பைக்கை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course