தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் – தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்பட பலரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து நகை பறிப்பு குற்றங்கள் அதிகரித்து வருவதால் நகைகளை அணிந்து வெளியே செல்வதற்கே பெண்கள், மூதாட்டிகள் அச்சப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாலிபர் ஒருவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அம்மா உணவக ஊழியர் செல்வியிடம் நகை பறிக்க முயன்றதால் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். இவர் கே.கே.நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்று  தெரிய வந்தது. இதையடுத்து கையும் களவுமாக பிடித்த அவரை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

Tamil Business Ideas