
கொரோனா பேரிடர் காலத்தில் பாலிசி முடிந்த நிலையிலும் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இதையடுத்து கொரோனா கட்டுக்குள் வந்ததால் நடைமுறை சிக்கல் நீங்கியது.
தற்போது கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் இந்தியாவில் உள்ள அனைத்து எல்ஐசி கிளைகளிலும் மெச்சூரிட்டி கிளைம் டெபாசிட் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதிலும் உள்ள 113 டிவிஷனல் அலுவலகங்கள், 2,048 கிளைகள், 1,536 சாட்டிலைட் அலுவலகங்கள், 74 வாடிக்கையாளர் மண்டலங்கள் ஆகியவற்றில் மெச்சூரிட்டி கிளைம் டெபாசிட் பெறுவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என்று கூறியுள்ளது. நாம் எந்த கிளையில் பாலிசி எடுத்திருந்தாலும், வேறு எந்த கிளையிலும் மெச்சூரிட்டி கிளைம் ஆவணங்களை சமர்ப்பித்து கொள்ளலாம். இதன் மூலம் கிடைக்க வேண்டிய தொகை எளிதில் நம்மை வந்து சேர்ந்துவிடும்.







