நேரில் செல்லாமல், வாக்காளர்களால் ஓட்டளிக்க இயலும்  தேர்தலில் ரிமோட் ஓட்டிங் முறை

புதுடெல்லி: அடுத்த லோக்சபா தேர்தலில், ‘ரிமோட் ஓட்டிங்’ முறை அறிமுகப்படுத்தப்படும்.என, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நம்பிக்கை தெரிவித்தார்.தேர்தலில் ஓட்டளிக்கும் முறையில், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளோம்.

 

 

இந்த தொழில்நுட்பத்தை, சென்னை, ஐ.ஐ.டி., யுடன் இணைந்து ஆய்வு செய்து வருகிறோம். ‘ரிமோட் ஓட்டிங்’ எனப்படும், இந்த புதிய தொழில்நுட்பம் வாயிலாக தேர்தலின் போது, தங்கள் தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு நேரில் செல்லாமல், வாக்காளர்களால் ஓட்டளிக்க இயலும். நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும், அங்கு, அதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்திற்கு சென்று, வாக்காளர்கள் ஓட்டளிக்கலாம்.

 

இந்த புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கான சோதனை முயற்சி, இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தொடங்க உள்ளது. லோக்சபாவுக்கு, 2024 ல் நடக்கும் தேர்தலில் ரிமோட் ஓட்டிங் முறையை அறிமுகப் படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடி, வாக்காளர்களால் ஓட்டளிக்க முடியாது.

 

தேர்தலின்போது, இதற்காக அமைக்கப்படும் சிறப்பு மையத்திற்கு நேரில் சென்று  ஓட்டளிக்க வேண்டும். அந்த மையத்தில், ‘பயோமெட்ரிக்’ சாதனங்கள், ‘வெப் கேமரா’வும் இருக்கும். அதன் வாயிலாக, வாக்காளர்களின் அடையாளம் உறுதி செய்யப்படும். அதன்பின், அவர்கள் ஓட்டளிக்க அனுமதிக்கப்படுவர். இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course