இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மஹாராஷ்ட்ரா, கர்நாடகா,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் நாளை இரவு முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வருகிற 4- ம்தேதி வரை வார இறுதியில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு என்றும் இந்த முழு ஊரடங்கின் போது காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர் கடைகளை அடைத்து இருக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முழு ஊரடங்கை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக மாநில அரசு எச்சரித்துள்ளது. கொரோனா காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருவதை அடுத்து கர்நாடக மாநில அரசு இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதே போன்ற முழு ஊரடங்கு நடவடிக்கையை தமிழக அரசு நடத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







