
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 199 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,60,166 ஆக உயர்ந்துள்ளது.நேற்று ஒரே நாளில் 29,785 பேர் குணமடைந்துள்ளனர்.நேற்று வரை 4,84,94,594 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.







