குடிசையில் வாழும் எளிமையான வேட்பாளர் கா.மாரிமுத்து..

 

திருத்துறைப்பூண்டியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள காடுவாகுடி கிராமம் தான் இவரது சொந்த ஊர். சாதாரண அடித்தட்டு விவசாயத் தொழிலாளர் கண்ணு- தங்கம்மாள் தம்பதியின் மகனான மாரிமுத்து, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர், கோட்டூர் ஒன்றிய இளைஞர் பெருமன்ற செயலாளர், கட்சியின் ஒன்றியத் துணைச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதி என பல பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

வறுமையிலும், அரசியலில் நேர்மை என்ற குறிக்கோளுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் மாரிமுத்து.

234 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் குறைந்த சொத்து மதிப்பு உள்ளவர் இவராக மட்டுமே இருக்கும். அவருடைய வங்கிக் கணக்கில் ரூ. 58 ஆயிரம், மனைவியிடம் ரூ. 1000, 3 பவுன் நகை, குடிசை வீடு, 66 சென்ட் நிலம் என இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 3 லட்சத்திற்குள் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course