![]()
தோல் சுத்தமாக இல்லாவிட்டால் மற்றும் உடலில் உள்ள நச்சுக்கள் முறையாக வெளியேறாவிட்டால் கூட தோல் மற்றும் தோலின் கீழ்ப்பகுதியில், பலவித கட்டிகள் ஏற்படக் கூடும். அவற்றில் ஒரு வகை தான், கொழுப்புக் கட்டி.
வியர்வைக் கட்டி, கொழுப்புக் கட்டி, வெப்பக் கட்டிகள். புற்றுநோய் கட்டிகள் என மரபியல் காரணங்களாலும், சில பழக்க வழக்கங்களாலும் ஏற்படும்.
கட்டிகள் வருவதற்கான காரணங்கள்:
சுகாதாரமற்ற சூழலில் வசிப்பவர், சர்க்கரை நோயாளிகள், உணவுக் கட்டுப்பாடு இல்லாதோர், அடிக்கடி தொற்றுநோயால் அவதிப்படுபவர்கள் உடலுழைப்பு இல்லாதவர்கள், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளோருக்கு, முதுகு, இடுப்பு, அக்குள், தொடை, கை, கால் போன்ற இடங்களில், அடிக்கடி கட்டிகள் வரலாம்.
![]()
கொழுப்புக் கட்டிகளை எப்படி உறுதிப்படுத்துவது?
சாதாரண கட்டிகளைப் போலத்தான் தோற்றமளிக்கும். இந்த கட்டி இருக்கும் இடத்தில், தோல் தளர்வாக இருக்கும்; அழுத்தினாலும் வலிக்காது. இதனால், பெரிய பாதிப்பு இருக்காது. எப்போதும் கொழுப்பு கட்டிகளை தொட்டு கொண்டே இருக்கக்கூடாது.
சிலருக்கு திடீரென, கை மற்றும் கால்களில் கொழுப்புக் கட்டிகள் உருவாகலாம். வலி அதிகம் இருந்தாலோ, நரம்புகள் பாதிக்கப்பட்டாலோ மட்டும் சிகிச்சை மேற்கொள்ளலாம். தோலின் அடிப்பகுதியில், கொழுப்பு தங்கியிருக்கும். இப்படி தங்கும் கொழுப்பு, ஒரே இடத்தில் தங்கியிருந்தால், அதை, ‘லைப்போமா'(lipoma) என்பார்கள்.
![]()
இந்த வகை கொழுப்பு கட்டிகள் வராமல் இருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் , நீர் காய்களான சுரைக்காய், புடலங்காய், வெள்ளை பூசணிக்காய் என கொடிக்காய்களை உணவில் நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் மற்றும் நச்சுக்கள் வெளியேற டீடாக்ஸ் டயட் (detox diet) வாரம் ஒருமுறை உண்ணலாம். அதாவது வாரத்தில் ஒரு நாள் வழக்கமான உணவுகளைத் தவிர்த்து பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்டு சமைக்காத உணவுகளை உண்ணலாம்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







