நெஞ்சு சளியை விரட்டும் மருத்துவம்..

நாம் அனைவரும் கொரோனா காலகட்டத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். மேலும், சளியின் பாதிப்பை உணராதவர்கள் நம்மில் யாரும் இருக்க முடியாது. உடலில் சாதாரணமாக சளி பிடித்தால் அது ஓரிரு நாட்களில் தானாகவே சரியாகி விடும். ஆனால் இருமலுடன் சேர்ந்து வெளியேறும் சளியின் நிறம் அடர்ந்த மஞ்சள் அல்லது வெளிர் பச்சையாக வரும்போது நெஞ்சு சளி அதிகம் இருப்பதை நாம் உணரலாம்.

பெரும்பாலும் அனைத்து வயதினரையும் நெஞ்சு சளி தாக்கும் மேலும், இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதனை எளிதில் சரி செய்து விடலாம். பிறகு, நாள்பட்ட நெஞ்சு சளியை, நுரையீரல் ஊடு சோதிப்பு முறையில் சரி செய்து விட முடியும். இதற்கு நாம் உரிய நுரையீரல் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

மேலும்,.  நோய் வருவதற்கு முன்பே அதை வராமல் தடுத்து கொண்டவர்கள் தான் புத்திசாலி. அப்படியே வந்தாலும் கை வைத்தியத்தில் அதை எளிதாக நீக்கி ஆரோக்கியமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.பிறகு, கடுமையான நோய்களை கூட சிறந்த வைத்தியத்தின் மூலம் தீவிரமாகாமல் பார்த்து கொண்டார்கள் என்பதை அனைவரும் அறிவோம்.

நெஞ்சு சளியை எவ்வாறு கட்டுப்படுத்துவது பற்றி டாக்டர் நர்த்தனன், முதன்மை நுரையீரல் மருத்துவர் கூறுவது  என்ன ?

  1. மேலும், சுவாசிப்பதில் பிரச்சினை இருந்தால் சுவாசப் பாதையின் உட்பகுதி பிரான்கோஸ்கோபி மூலம் பரிசோதிக்கப்பட்டு காரணம் கண்டறியப்படும். சாதாரண திசுவை போன்று உறைந்த சளியை இந்த சிகிச்சையின் மூலம் அகற்றி விட முடியும். பிறகு, அவ்வாறு அகற்றப்படும் சளியை ஸ்கோப் வழியாக சேகரித்து நுண்ணிய பரிசோதனைக்கு அனுப்பி நோய்த்தொற்றை உறுதி செய்த பின்னர் உரிய சிகிச்சை மேற்கொள்ளும் போது சளி மேலும் உற்பத்தியாகாமல் முற்றிலுமாக தடுக்க முடியும்.
  1. குழந்தைகளை அதிகம் பாதிக்கும் சளியை விரட்ட நோயாளிகளின் சிகிச்சை முடிவுகளின் அடிப்படையில் நுரையீரல் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் மூலம் பாதிப்பைகளை முற்றிலுமாக சரி செய்யலாம். பிறகு, சாதாரண சளியாக இருக்கும் பட்சத்தில் ஓரிரு நாட்களில் தானாகவே சரியாகிவிடும். அது தொடரும் பட்சத்தில் அதை நெஞ்சு சளியாக மாறி விடாமல் ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்து விடுவது பல்வேறு நுரையீரல் பாதிப்புகளை தவிர்க்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top