நாம் மிகவும் கவனமாக உண்ணும் உணவை கருத்தில் கொள்வது மிகவும் அவசியம். நம் உடலில் முதலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவது உணவு மட்டுமே. அதனால் நாம் எந்த உணவை உட்கொள்கிறோம் என்பதில் கூர்ந்து கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். இதை கருத்தில் கொண்டு உங்கள் அத்தியாவசிய மளிகை பொருட்கள் வாங்க செல்லும்போது, உங்கள் பட்டியலை ஐந்து உணவுக் பிரிவுளாகப் பிரிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த பிரிவுகளின் கீழ் உள்ள உணவுகள் உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைக் வழங்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைத்துள்ளார்.
கொரோனா ஊரடங்கின் போது, ஆரோக்கியமான உணவு முக்கியமானது. நீங்கள் உண்ணும் உணவானது உங்கள் உடலின் பாதுகாப்பு நெறிமுறைகள் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேல் சொன்ன ஐந்து முக்கிய உணவு பிரிவுகளை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கப்பட்டால், உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க ஒருங்கிணைந்த முறையில் செயல்படும். எனவே, இந்த ஊட்டச்சத்துக்களுடன் உணவுப் பொருட்கள் இருப்பது முக்கியம், என்று அவர் கூறியுள்ளார்.
நாம் தினமும் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கு கொரோனா காலங்களில் வெளியே செல்வது நல்லதல்ல. எனவே, நீங்கள் வெளியே செல்ல முடிவு செய்தவுடன், உங்களை (சுயமாக) ஆரோக்கியமாக வைத்திருக்க சரியான உணவுகளை கொண்டு வருவது முக்கியம். லாக்டவுன் நேரத்தின் போது நீங்கள் சேமித்து வைக்க வேண்டிய ஐந்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உணவுப் பொருட்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
அவர் பரிந்துரைத்த உணவுகள் :
ஊரடங்கு காலங்களின் போது உங்கள் உடல் இயக்கம் தடை செய்யப்பட்டிருப்பதால், சோர்வு எளிதில் வரும். கார்ப்ஸ் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உங்களுக்கு சக்தியைத் தருகிறது. ஆதாரங்கள்: கோதுமை, ஜோவர் மற்றும் பஜ்ரா.
புரதங்கள்
நமது உடலில் ஆன்டிபாடிகள் புரதங்களால் உருவானதால் , நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் புரதங்கள் நேரடி மற்றும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆதாரங்கள்: பருப்பு வகைகள், மெலிந்த இறைச்சி, முட்டை, பால்.
ஆரோக்கியமான கொழுப்புகள்
நம் உடலில் நரம்பு மண்டலத்தின் செயல்பாடு மற்றும் வைட்டமின்களை உறிஞ்சுவதற்கு மிக முக்கியமாக கொழுப்புகள் தேவைப்படுகின்றன. ஆனால், கொட்டைகள், முட்டை, மெலிந்த இறைச்சி மற்றும் தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய் போன்ற எண்ணெய்கள் வடிவில் ஆரோக்கியமான கொழுப்புகளைத் தேர்வு செய்ய நினைவில் கொள்ளுங்கள்.
வைட்டமின்கள்
உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு வைட்டமின்கள் சி மற்றும் டி ஆகியவை மிகவும் முக்கியப்பங்காற்றுகின்றன. வைட்டமின் சி சுவாச நோய்களுடன் போராட உதவுகிறது. மேலும், பெரும்பாலான மக்கள் வீட்டை பூட்டிவிட்டு உள்ளே இருப்பதால், சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி அளவு வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது, எனவே நீங்கள் வைட்டமின் டி நிறைந்த உணவுகளைத் தேட வேண்டும். ஆதாரங்கள்: கிவி, ஆரஞ்சு, பால் பொருட்கள்.
தாதுக்கள்
நமது உடலில் துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நோயெதிர்ப்பு சக்தியைக் அதிகப்படுத்த மிகவும் முக்கியம், ஏனெனில் அவை முக்கியமான உயிரியல் எதிர்வினைகளில் பங்கு வகிக்கின்றன. அவை குளிர்ச்சியைக் குறைப்பதில் நிரூபிக்கப்பட்ட விளைவுகளைக் கொண்டுள்ளன. ஆதாரங்கள்: கொட்டைகள், முழு தானியங்கள், இலை கீரைகள்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News