ஊரடங்கு உத்தரவால் கவலையா? உடற்பயிற்சி வீட்டிலிருந்தே  செய்யலாம் வாங்க!

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும்  சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால், வீட்டிற்கு வெளியே மட்டும் தான் அதை செய்ய முடியும் என்றில்லை, வீட்டில் இருந்தே செய்யலாம்.

வீட்டிலிருந்தே  உடற்பயிற்சி செய்வது 

இன்று முதல் முழு ஊரடங்கு கொரோனா 2-வது அலையின் தொற்று  காரணமாக உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தே உடற்பயிற்சி எப்படி மேற்கொள்வது என்று பார்ப்போம்.

நீங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும்  சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் , வீட்டிற்கு வெளியே மட்டும்தான் உடற்பயிற்சியை  செய்ய முடியும் என்றில்லை, வீட்டில் இருந்தே செய்யலாம். உங்கள் அன்றாட பணிகளில்  சில ஸ்மார்ட் வழிகளில் கொழுப்பு உடைக்கும் செயல்களாக மாற்றமுடியும். இதனால் வீட்டு வேலைகள் எளியமுறையில் அல்லது வேலைகளை செய்வது உங்கள் உடலில் இருக்கும் கலோரி இரட்டிப்பாகும்.  உங்களுக்கு இந்த வழி எடை குறைக்கவும் உதவுகிறது. 15-20 நிமிடங்கள் டிராப்மில்லில் ஓடுவதற்கு சமமாக மாப்பிங், வீட்டை சுத்தம் செய்யும் வேலைகள்  அல்லது தளபாடங்கள் மறுசீரமைத்தல் போன்ற கடுமையான வேலைகளைச் செய்வது நல்லது என்று ஆய்வுகள் கூறுகின்றன.


கால நேரத்தை சுய கவனிப்பு, தியானம் அல்லது யோகா செய்வதில்  செலவிடுவது எளிதான வழிகளில் ஒன்று. நாம் அனைவரும் தொடர்ந்து  யோகா பயிற்சி செய்வதால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், உங்கள் மனதை மையப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் முடியும். தியானம் செய்வதால் கவனத்தை சிறப்பாக செலுத்த உதவுகிறது மற்றும் எதிர்மறை ஆற்றல்களையும் பதட்டத்தையும் நீக்கப்படுகிறது. நல்ல உடற்பயிற்சி செயல்பாடுகள்  கொண்ட யோகா பயிற்சியை செய்வது நம் உடலுக்கும் மனதிற்கும் நல்லது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவி தீவிரமாக பரவிவரும்  நிலையில்  ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் அறிவித்துள்ளது . கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதனால்  அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்களின் நிலையை மாற்றியுள்ளது.  தினந்தோறும் உடற்பயிற்சி நிலையத்தில் உடற்பயிற்சி செய்பவர்கள், பூங்காவில் நடைப்பயிற்சியோ, உடற்பயிற்சியோ செய்பவர்கள் எனப் பலரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

பூங்காக்களுக்கு நடைப்பயிற்சி  சென்று செய்ய முடியாத பட்சத்தில் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்வதும், உடற்பயிற்சி செய்வதும் சரியா என்ற கேள்வி மக்களிடையே கேள்வி எழுந்து வருகிறது.சமூக வலைதள பக்கத்தில் இந்தக் கேள்விக்கு  இவ்வாறான பதில்கள் பரவி வருகின்றன. `மொட்டை மாடியில் பயிற்சி செய்ய கூடாது. எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். மொட்டைமாடிக்குச் சென்று சுற்றினால் நோய்த் தொற்று உண்டாகும் என்றெல்லாம் கருத்துகள் பரவிவருகின்றன.


மக்கள் அனைவரும் கொரோனா ஊரடங்கு காலத்தில் மொட்டைமாடியில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்ற முயற்சிகளில் ஈடுபடலாம். நான்கு சுவருக்குள் வீட்டிலேயே தவிப்பது போல இருப்பவர்களுக்கு  மொட்டை மாடியில் நடப்பது புத்துணர்ச்சியை அளிக்கும். எவ்வித பிரச்சனைகளும் வராது. கொரோனா வைரஸ் ஆனது  காற்றில் பரவக்கூடியது அல்ல. கொரோனா தொற்று உள்ள ஒருவர் மற்றொருவரைத் தீண்டுவதாலும், அவரது இருமல், எச்சில் போன்றவற்றின் மூலம் வெளியேறும் நீர்த்திவலைகள் மூலமும் மட்டுமே இது பரவுகிறதே தவிர காற்றின்‌ மூலம் பரவக்கூடியது அல்ல . ஆகையால்  மொட்டை மாடியில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து கொள்ளலாம். மொட்டை மாடியில் ஒருவேளை  கூட்டம் கூட்டமாக உடற்பயிற்சி செய்ய வருவார்கள் என்றால் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கலாம். மற்றபடி எந்தப்பாதிப்பும் இல்லை.

தினந்தோறும் நடப்பது அல்லது உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்பவர்கள்  வீட்டிலேயே தற்போது இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நீங்கள்  உடற்பயிற்சிகளையும் , யோகா பயிற்சிகளையும் வீட்டிலிருந்தே செய்யலாம்.  வீட்டிலிருந்தே  இன்றைய நவீன காலக்கட்டத்தில் எப்படி  உடற்பயிற்சி செய்யலாம் என்று பல வீடியோக்கள் உங்களுக்கு வழிகாட்டும்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

Tamil Business Ideas