பிராணாயாமம் மூச்சுப் பயிற்சி செய்தால் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கலாம்..

இன்றைய நாட்களில் நாம் அனைவரும் யோகாவை கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம் அதன்படி, பிராணயாமம்  என்பது ஒரு மூச்சுப் பயிற்சி ஆகும். இந்த மூச்சுப் பயிற்சியைத் தவறாது செய்து வந்தால், நம் உடலில் உள்ள செல்லுகளுக்கு  சக்தியும் ஆற்றலும் கிடைக்கும். பிராணயாமா என்பது ஒரு சமஸ்கிருத வாா்த்தையாகும். இந்த வாா்த்தைக்கு உயிா் சக்தியின் தலைமை அல்லது உயிா் சக்தியை வெளியே இழுப்பது அல்லது நமது உடலை வாழ வைக்க சுவாசிப்பது என்று பொருள்.

பிராணயாமா பயிற்சி பாா்ப்பதற்கு மிக எளிமையாகத் தொிந்தாலும், அதைத் தினமும் செய்து வர வேண்டும். யோக அறிவியலின் படி, பிராணயாமாவின் நோக்கம் என்னவென்றால், உயிர் சக்தியை வழிநடத்துவதில் நாம் பங்கு பெறுவதாகும்.

மேலும், இந்த பயிற்சியின் முக்கியமான அம்சம்  சாியான முறையில் மூச்சுவிட வேண்டும் என்று பிராணயாமா வலியுறுத்துகிறது, மூச்சுவிடும் பயிற்சியில் ஈடுபடும் போது, நம்முடைய எல்லா உடல் உறுப்புகளும் இந்த பயிற்சியில் பங்கு பெறும். நம் உடலில் சுத்தமான ஆக்ஸிஜன், நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் சென்று, ஆகவே கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த பயிற்சியை தினமும் செய்தால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.

நரம்புகள் சுத்தமாகும் 

இந்த  பயிற்சியை அனைத்து வயதுடையவர்களும் செய்யலாம். நம் உடலில் உள்ள ஏறக்குறைய 80,000 நரம்புகளை பிராணயாமா தூய்மைப்படுத்துகிறது என்று சொல்லப்படுகிறது. நமது உடலுக்குள் செல்லும் சக்தியை பிராணயாமா சமப்படுத்துவதால், நமது முழுமையான உடல் ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது. அதனால் பிராணயாமா பயிற்சியைத் தினமும் செய்து வரவேண்டும் என்று பல மருத்துவ நிபுணர்கள் பாிந்துரைக்கின்றனா். அவ்வாறு தவறாமல் தினமும் பிராணயாமா பயிற்சியைச் செய்து வந்தால் நமது மனம் மிக உறுதியாக இருக்கும். அது போல் நமது உடல் நோயின்றி நலமுடன் இருக்கும்.

செரிமானம் சீராகும்…

யோகா பயிற்சிகளை, தியானப் பயிற்சிகளாக பலா் கருதுகின்றனர். எனினும் பிராணயாமா என்ற யோகா பயிற்சி நமது உடல் நலமாக இருக்க உதவி செய்கிறது. மேலும், இத்தகைய  ஆக்ஸிஜன் நமது உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் செல்வதால், பிராணயாமா நமது சொிமான அமைப்பை சீராக்குகிறது. மேலும் நமது தோலுக்கு மெருகு ஏற்றுகிறது. பிராணயாமா நீண்ட வாழ்நாளையும் வழங்குகிறது.

மன ஆரோக்கியம் வலுவாகும்

மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், பிராணயாமா நமது மன ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது. அதாவது நமது ஒருமுகப்படுத்தும் சக்தி, நினைவாற்றல் ஆகியவற்றை அதிகாித்து, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நமது மூளை ஒரு சக்தி வாய்ந்த கருவியாகும். நம் நாள் முழுவதும் செய்ய வேண்டியவற்றை முறையாகச் செய்வதற்கு வழி நடத்துவது நமது மூளை ஆகும்.மேலும், இந்த பயிற்சி  நமது உடல் முழுவதும் ஆக்ஸிஜனை அதிகாித்து அதன் மூலம் நமது மூளையிலுள்ள நரம்புகளை அமைதிப்படுத்தும், மேலும் இரத்த ஓட்டம் அதிகாித்து, நமது மூளை அழுத்தம் இன்றி, அமைதி அடைய உதவி செய்கிறது.

இரத்த அழுத்தம் சீராக இருக்கும்

மேலும், இது பலவிதமான மனஅழுத்த பிரச்சனைகளை தீர்க்கிறது. இரத்த அழுத்த பிரச்சினைகளில் இருப்பவா்களுக்கு, பிராணயாமா பயிற்சி, மிகவும் சிறந்த பயிற்சியாக இருக்கும். அதாவது இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, பிராணயாமா பயிற்சி அதிவேக இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. பிராணயாமா ஒரு ஆழ்நிலைத் தியானப் பயிற்சியாக இருப்பதால், அது நமது உடலை அமைதிப்படுத்தி, ஹாா்மோன்களை வெளியேற்றி, நமது உடலை முழுமையாக தளா்ச்சி அடையச் செய்கிறது. தினமும் பிராணயாமா பயிற்சியைச் செய்து வந்தால், இரத்த அழுத்தம் மட்டும் அல்லாமல், சா்க்கரை நோய் போன்ற பிரச்சினைகளையும் குணப்படுத்தலாம்.

ஆயுட்காலம் நீட்டிக்கும்..

நாம் தினமும் அனைவரும் தவறாமல் முறையாக பிராணயாமா பயிற்சி செய்து வந்தால், அது ஆயுட்காலத்தை நீட்டிப்பதாக பல ஆய்வுகள் தொிவிக்கின்றன. அதற்கு காரணம் பிராணயாமா நாம் முறையாக சுவாசிப்பதற்கு உதவி செய்கிறது.  மேலும், முறையாக சுவாசிக்க வேண்டும் என்பதில் கவனம் கொள்ளுங்கள். யோகா தத்துவத்தின் படி, நமது நீண்ட ஆயுட்காலம் என்பது நமது சுவாசிக்கும் பழக்கத்தில் அடங்கி இருக்கிறது என்பதாகும்.

உடல் எடையைக் குறைக்க உதவும்..

“பெரும்பாலும் உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு பிராணயாமா ஒரு முக்கிய கருவியாக இருக்கிறது. அதாவது நமது உடலை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க பிராணயாமா உதவி செய்கிறது. “நாம் தினமும் பிராணயாமா பயிற்சியை செய்து வரத் தொடங்கினால், அது நாம் உணவின் மீது கொண்டிருக்கும் ஆசையை குறைக்கச் செய்து, நமது உடல் எடை அதிகாிப்பதை குறைக்கிறது.” நமது உடல் களைப்பாக அல்லது சோர்வாக  இருக்கும் போது, நாம் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை சாப்பிட எண்ணுகிறோம். ஆனால் பிராணயாமா பயிற்சி நாம் உண்ணும் உணவுகளின் மீது நாம் தகுந்த விழிப்புணா்வுடன் இருக்கச் செய்கிறது.

பிராணயாமா பயிற்சியை நீங்களும் அறிந்துகொள்ளுங்கள்

  1. தரையில் விாித்த பாயின் மீது சம்மணமிட்டு அமா்ந்து கொள்ள வேண்டும். 
  2. முதலில் வலது பக்க மூக்குத் துவாரத்தை கட்டை விரலால் மூடிக் கொள்ள வேண்டும். 
  3. இடது பக்க மூக்குத் துவாரத்தின் மூலம் காற்றை இழுக்க வேண்டும். இந்த பயிற்சியைச் செய்யும் போது நமது முதுகை வளைக்காமல், நேராக நிமிா்ந்து அமா்ந்து, அதே நேரத்தில் நமது உடலை தளா்வாக வைத்திருக்க வேண்டும். நமது இடது கை நமது இடது காலின் முட்டியில் இருக்க வேண்டும்.
  4. இப்போது இடது பக்க மூக்குத் துவாரத்தை, வலது கை மோதிர விரலால் மூடிக் கொண்டு, வலது பக்க மூக்குத் துவாரத்தின் மூலம் மூச்சை வெளியில் விட வேண்டும்.
  5. இந்த பயிற்சியைத் தொடா்ந்து 15 முறைகள் செய்ய வேண்டும். பின் 5 நிமிடங்கள் இடைவெளி விட்டு, மீண்டும் பிராணயாமா பயிற்சியைத் தொடங்க வேண்டும்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com