ஸ்ட்ராபெரி பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் பழங்களில் ஸ்ட்ராபெர்ரி பழமும் ஒன்று. இப்பழத்தில்  வைட்டமின்-சி, தையமின், வைட்டமின் ஏ, வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், காப்பர், மாங்கனீசு, அயோடின், பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், செலீனியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.

பற்களில் இருக்கும் கறையை நீக்கிவிடும்:


நம்மில் பலர் விரும்பி குடிக்கும் ஸ்ட்ராபெரி  பழச்சாற்றை குடித்தால் பற்களில் கறைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். ஏனெனில் இதில் உள்ள அமிலங்கள், பற்களில் இருக்கும் கறையை நீக்கிவிடும் தன்மை உடையது.

 

மலச்சிக்கல் பிரச்சனைகள் நீக்கும்:

இப்பழத்தின் விலை அதிகமாக இருந்தாலும் அதன் மருத்துவ குணம் அதிகம்  என்பதால் மக்கள் விரும்புகின்றனர். ஸ்ட்ராபெரி  பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த பழத்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். வயிற்றில் உணவை செரிக்க உதவும் ஜீரண அமிலங்களின் உற்பத்தியை தூண்டும் திறன் ஸ்ட்ராபெரி  பழத்திற்கு உண்டு. இதனால் குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் நலன் மற்றும் சீரான இயக்கத்திற்கும் ஸ்ட்ராபெரி  பழம் பேருதவி புரிகிறது.

 

இதயம் சம்பந்தமான நோய்களை தடுக்கும்:

இதில் நார்ச்சத்துகள் அதிகம் என்பதால்,ஸ்ட்ராபெரி சாப்பிடும் நபர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதை தடுக்கிறது, பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. ஸ்ட்ராபெரி  பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் வைட்டமின்   சத்துகள் தலைமுடி உதிர்வதை தடுக்கிறது. மேலும், ஸ்ட்ராபெரி  பழத்தில் உள்ள வைட்டமின் சத்துகள் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும்.

 

உடல் உஷ்ணத்தை தடுக்கும்:

முக்கியமான மருத்துவகுணங்களில் ஒன்றான உடல் உஷ்ணம் அதிகம் இருக்கும் ஆண்களுக்கு, அவர்களின் விந்தணுக்கள் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்படுகின்ற வாய்ப்புகளை குறைகிறது. ஸ்ட்ராபெரி  பழம் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைவது மட்டுமில்லாமல் ஆண்களின் விந்தணுக்களை பெருக்கி, அவர்களுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறக்க உதவி செய்யும் தன்மை கொண்ட ஒரு பழமாக இருக்கிறது.

 

எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்:

ஸ்ட்ராபெரி அதிகம் சாப்பிடுபவர்களுக்கு கால்சியம் சத்துக்கள் அதிகம் கிடைக்கிறது. மேலும், அனைத்து வயதினருக்கும் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டியது அவசியமாகும். அடிக்கடி ஸ்ட்ராபெரி  பழங்களை நன்றாக  சாப்பிட்டு வருபவர்களுக்கு  சுலபத்தில் எலும்பு முறிவுகள்,  தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

Tamil Business Ideas