நாம் அனைவரும் விரும்பி பருகும் முலாம் பழங்களின் சாறுகளில் மருத்துவகுணம் நிறைந்து காணப்படுகிறது. கோடைகாலங்களில் வெப்பம் அதிகரிப்பது, அனல் கற்று வீசுவதால் உடலில் இருகின்ற நீர் சத்துகள் வெளியேறி, உடல் சுலபத்தில் வெப்பமடைகிறது.

இதனால் நமக்கு சீக்கிரத்தில் சோர்வு மற்றும் உடலில் அத்தியாவசிய உப்புகள் இழப்பு ஏற்படுகிறது. கோடை காலங்களில் முலாம் பழங்களை துண்டுகளாக்கி, தண்ணீரில் சர்க்கரை அதிகம் சேர்த்து கரைத்து, அதில் முலாம் பழத்துண்டுகளை ஊறவைத்து பருகி வந்தால் உடல் உஷ்ணம் தணியும்.
சிறுநீரகங்களுக்கு நல்லது…

நமக்கு கோடை காலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில் நீர்சத்து நிறைந்துள்ள முலாம் பழங்களை சாப்பிடுவதாலும் அல்லது முலாம் பழச்சாறு அருந்துவதாலும் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, சிறுநீர் பைகளில் மூத்திர அடைப்பு மற்றும் நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்.
இரத்த ஓட்டம் சீராகிறது…

கோடை காலங்களில் உடலின் நீர் வியர்வையாக வெளியேறிவிடுவதால் இரத்தத்தில் நீர்சத்து குறைந்து இரத்த ஓட்டம் வேகம் குறைகிறது. உடலின் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இப்படிப்பட்ட சமயங்களில் முலாம் பழங்களை சாப்பிடுவதாலும் அல்லது முலாம் பழச்சாறு அருந்துவதாலும் இரத்தத்தில் நீர் சத்து சேர்ந்து, இரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
மலச்சிக்கல் பிரச்சனை தீரும்..

மாவுச்சத்து மிகுந்த உணவுகளையும், நார்ச்சத்து குறைந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகிறது. அதேபோல் வயிற்றில் நீர்சத்து குறைவதாலும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட காரணமாக இருக்கிறது. முலாம் பழங்களில் நார்ச்சத்து, நீர் சத்து மருத்துவகுணம் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது.
இதயம் சம்பந்தமான நோய்களை தடுக்கும்..

முலாம்பழம் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் முலாம் பழத்தில் நார்ச்சத்து மற்றும் அடினோசைன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது ரத்த செல்கள் உறைவதை தடுத்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







