சுவாசிக்கும் காற்று நமக்கு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். அதற்கு ஆழ்ந்த சுவாச பயிற்சி என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அதுமட்டுமில்லாமல் உடல் முழுக்க புத்துணர்வை பெறுவதற்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

சுத்தமாக நாம் சுவாசிக்கும் காற்று இருந்தாலே போதும் நம் உடலினுள் ஒரு சில புத்துணர்ச்சியை பெற முடியும். ஏனெனில் நம் உடலில் உள்ள செல்கள் ஒவ்வொன்றும் நன்றாக செயல்பட ஆக்ஸிஜன் என்பது மிகவும் அவசியமான ஒன்று.எல்லா வேலைகளுக்கும் நம் செல்களுக்கு தேவையான எரிபொருளாக மற்றும் இரத்தத்தை சுத்திகரிக்க என ஆக்ஸிஜன் அவசியம்.

உங்க உடல் ஆக்ஸிஜன் நிறைந்த காற்றை சுவாசிக்கும் போது முழுக்க புத்துணர்வை பெறுவீர்கள். எனவே ஆழ்ந்த மூச்சை எடுத்து சுவாசிக்கும் பயிற்சி உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது உங்க நுரையீரலை பலப்படுத்தி கொரோனா போன்ற தொற்று நோய்களில் இருந்து உங்களை காக்கிறது.
சுவாசப் பாதை ஆரோக்கியம்
நீங்கள் ஆக்சிஜனை சுவாச பாதை வழியாக சுவாசிக்கும் போது நுரையீரலுக்கு சென்று நுரையீரலில் இருந்து உங்கள் இரத்தத்திலும் (இதயம் வழியாக) மற்றும் அனைத்து திசுக்களுக்கும் உங்கள் உடலுக்குள் செல்கிறது.

உங்கள் மூளையில் உள்ள சென்சார்கள், கரோடிட் தமனி மற்றும் பெருநாடி உங்கள் இரத்தத்தின் கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஆக்ஸிஜன் அளவைக் கண்டறிந்து உங்கள் சுவாச விகிதத்தை தேவைக்கேற்ப சரிசெய்யும். நீங்கள் ஒரு நாளைக்கு 17,000-23,000 முறை சுவாசிக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா.
ஆழ்ந்த சுவாச பயிற்சியின் நன்மைகள்
நீங்கள் உங்கள் சுவாசத்தை பற்றி அறிந்திருந்தால் ஆழ்ந்த சுவாச உத்திகளைப் பயிற்சி செய்து உங்கள் மன அழுத்தத்தைக் குறைப்பதர்கும் மற்றும் சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கலாம் மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

உடலில் மன அழுத்தத்திற்கு காரணமான கார்டிசோல் ஹார்மோன் அளவை குறைக்கிறது. ஏனெனில் உங்களுக்கு அதிகப்படியான ஹார்மோன் அளவு தீங்கு விளைவிக்கும். உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு ஆகியவற்றை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதே போல் உங்கள் நுரையீரலை பலப்படுத்த முடியும்.
சுவாச பயிற்சியை செய்வது எப்படி
உங்க முதுகை தரையில் படும்படி வசதியாக கொண்டு கீழே படுத்துக் கொள்ளுங்கள். ஐந்து வரை எண்ணி, மெதுவாக காற்றை உள்ளிழுக்க வேண்டும் , உங்கள் உடல் விரிவடையட்டும்,உங்கள் முதுகெலும்பிலிருந்து உங்கள் நுரையீரலை விலக்கி விட வேண்டும். உங்கள் நுரையீரலை கீழே இருந்து மேலே நிரப்பவும். பின்னர், மெதுவாக மூச்சை இழுத்து ஏழு வரை எண்ணிக் கொள்ளுங்கள்.

ஆழ்ந்த சுவாசங்களை தினமும் காலையில் 10 முறை எடுத்துக் கொள்ளுங்கள், ஆழ்ந்த சுவாசத்தை ஒவ்வொரு இரவும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட முறை எடுத்துக் கொள்ளுங்கள். நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







