
பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கிய நிலையில் படப்பிடிப்பிற்கு புதிதாக சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்க்கு பெரிய அடியை கொடுத்து உள்ளது. வெகு நாட்களுக்கு பிறகு தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஒரு வழியாக சமீபத்தில் பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. முதல் கட்ட படப்பிடிப்பு ஆனது ஜார்ஜியாவில் தற்பொழுது நடந்துவருகிறது.

ஜார்ஜியாவில் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி மழை பெய்து வருவதாக கூறுகின்றனர். மழையின் காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த முடியாமல் தளபதி 65 படக்குழுவினர் தடுமாற்றத்தில் உள்ளனர்.
திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த முடியாததால் சன் நிறுவனத்திற்கு தளபதி 65 படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. ரஷ்யாவில் பிளான் செய்யப்பட்ட தளபதி 65 படத்தின் படப்பிடிப்புகள் கடைசி நேரத்தில் ஜார்ஜியா நாட்டுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடதக்கது. தளபதி 65 படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இங்கு படப்பிடிப்பு முடிந்ததும் மே மாதம் முதல் வாரத்தில் சென்னையில் தொடங்கப்பட இருந்த படப்பிடிப்பு தற்போது தள்ளிப்போகும் என்று தெரிகிறது. இருந்தாலும் கிடைக்கும் நேரத்தில் படப்பிடிப்பை தொய்வில்லாமல் நடத்துவதில் ஆயுத்தமாக இருக்கிறாராம் நெல்சன். இருந்தாலும் திட்டமிட்டபடி தளபதி 65 படத்தின் ஜார்ஜியா படப்பிடிப்பு நடக்குமா என்பது சந்தேகம்தான்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







