தர்மபுரி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தர்ணா

தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளி இறந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவரை தாக்கினார்கள்.  தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா  பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு மருத்துவர்கள் இரவு பகலாக சுழற்சி முறையில் மருத்துவம் அளித்து வருகின்றனர்.


இந்நிலையில்  பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த பியரேஜான் என்ற 65 வயதான முதியவர் மருத்துவம் பலனின்றி உயிரிழந்தார் இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனை மருத்துவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயற்சி செய்துள்ளனர். மருத்துவர்கள் எங்களுக்கு  மருத்துவமனை வளாகத்தில் தங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும் மருத்துவரை தாக்க முயற்சி செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய கோரி மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மருத்துவமனைக்கு வந்த போலீசார் உறுதியளித்ததை அடுத்து மருத்துவர்கள் கலைந்து சென்றனர்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com