கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை காணவில்லை என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாகர்கோவில் அருகே குருசடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கடந்த 7ஆம் நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மே 9 ஆம் நாள் இரவு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இறந்தவரின் உடலை உறவினர்கள் மத்தியில் காண்பிக்கும்போது செல்வராஜ் உடலுக்கு பதிலாக வேறு ஒருவரின் உடலை காண்பித்ததாக தகவல் வெளியானது. இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் இறந்த செல்வராஜ் உடலைக் கேட்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.

ஆனால் இதுவரை செல்வராஜ் உடலை காண்பிக்காததால் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட போவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







