காங்கிரஸ் கட்சி நிர்வாகி வீட்டில் – மர்மநபர்களால் 30 சவரன் நகை கொள்ளை

 

செங்கல்பட்டு அருகே காங்கிரஸ் கட்சி நிர்வாகி வீட்டில் 30  சவரன் நகைகளை மர்மநபர்கள்  கொள்ளையடித்து சென்றனர்.  பிரவின்குமார் என்பவர் செங்கல்பட்டு அருகில் உள்ள திம்மாவரம் பாலாறு 3வது நகரை சேர்ந்தவர். 

 


அவர் செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ஆவர். அவர் மனைவி உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருவதாகவும் நேற்று முன்தினம் அவரை பார்ப்பதற்காக பிரவின்குமார், சென்னை சென்றிருக்கிறார்.

 

மனைவியை பார்த்துவிட்டு அவர் மாலையில் வீடு திரும்பியபோது, அவரது வீடு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியில் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 30 சவரன் நகைகள் மற்றும் 3 லட்சம், வெள்ளி பொருட்கள் போன்ற விலை உயர்ந்த கேமராக்கள் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

 

இதனையடுத்து புகாரின் பேரில் கொள்ளையர்களை செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course