
திருவள்ளூர் : இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்ததால் போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டியை சேர்ந்த வாணி தினமும் கல்லூரிக்கு ரயிலில் செல்வதால் அப்போது, வேப்பம்பட்டி ரயில் நகரை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவருடன் பழக்கம் ஆனது. நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.
இதனையடுத்து சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு கடந்த 2019ம் ஆண்டு விக்னேஷ்வரன் அழைத்து சென்று வாணியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வலையில் விழ வைத்து உல்லாசமாக இருந்திருக்கிறார். இதனால் வாணி கர்ப்பமானார். இதுபற்றி விக்னேஷ்வரனிடம் கூறியதும் வாணியை வேப்பம்பட்டில் உள்ள ஒரு கடைக்கு வரவைத்து குளிர்பானம் வாங்கி கொடுத்து, நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறி உறுதியளித்து வீட்டுக்கு அனுப்பினார்.

2 நாட்கள் கழித்து, தனக்கு கரு கலைந்து விட்டதாக தொலைபேசியில் வாணி தெரிவித்தார். அதற்கு, நான் தான் குளிர்பானத்தில் கருக்களைப்பு மாத்திரைகலந்து கொடுத்தேன் என கூறியுள்ள விக்னேஸ்வரன். பின்னர், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி பலமுறை உல்லாசமாக உடலுறவில் ஈடுபட்டு இருந்துள்ளார். அதேசமயத்தில் வேறொரு பெண்ணுடன் விக்னேஷ்வரனுக்கு நிச்சயம் நடந்தது தெரியவந்துள்ளது.
இதைதெரிந்து கொண்ட வாணி, விக்னேஷ்வரனிடம் கேட்டதற்கு வெளியில் நடந்ததைப்பற்றி சொன்னால் உன்னையும் உன் குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவேன் என கொலைமிரட்டல் விடுத்துருக்கிறார்.
மேலும் சமூக வலைத்தளங்களில், நீ என்னுடன் உடலுறவில் இருந்த படங்களை பதிவேற்றம் செய்து விடுவேன் என மிரட்டியதால் பாதிக்கப்பட்ட வாணி, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ்வரனை கைது செய்து பின்னர் அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







