முதலமைச்சர் ஸ்டாலின் 5 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார்!

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம், திருப்பூர், கோவை உள்பட 5 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து கொரோனா நோய்த்தொற்று  தடுப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார்.
 
 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருகிறது. அதை தடுத்து நிறுத்த தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு உத்தரவை அரசு கடுமையாக அமல்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அதோடு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் குறைந்துள்ள இந்த  சூழ்நிலையில், அங்கு கூடுதல் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் இன்று காலை கொரோனா நோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக, சென்னையில் இருந்து விமானத்தில் சேலம் செல்கிறார். சேலம் உருக்காலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவமனையை பார்வையிடுகிறார். அடுத்து மாவட்ட கலெக்டர் மற்றும் உயரதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்.
 
 
பின்பு பகல் 12.15 மணிக்கு, கோவை – திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நேதாஜி ஜவுளி பூங்காவிற்கு செல்கிறார். அங்கு, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, கொரோனா நோய்த்தொற்று  தடுப்பூசி போடும் திட்டத்தை துவக்கி வைக்கிறார்.
 
பின்பு பகல் 1.30 மணிக்கு, கோவை சுற்றுலா மாளிகை சென்று அங்கு கொரோனா நோய்த்தொற்று  தடுப்பு பணிகளை ஆய்வு செய்கிறார். இரவு 7:30 மணிக்கு, கோவையிலிருந்து தனி விமானத்தின் மூலம் மதுரை செல்கிறார். இரவு மதுரை சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.
 
 
நாளை காலை 9.45 மணிக்கு, மதுரை கலெக்டர் அலுவலகம் செல்கிறார். அங்கு கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். பின், தோப்பூர் மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள கொரோனா சிகிச்சை வசதிகளை ஆய்வு செய்கிறார். சாலை மார்க்கமாக மாலை 5:00 மணிக்கு திருச்சி செல்கிறார். அங்கு எம்.சி., மருத்துவமனை, என்.ஐ.டி., ஆகியவற்றில் ஆய்வு செய்கிறார்.
 
அதிகாரிகளுடன் ஆலோசனை முடித்து, மாலை 6:15 மணிக்கு, திருச்சி விமான நிலையத்தில்,  பத்திரிகை, டி.வி. நிருபர்களுக்கு பேட்டி அளிக்கிறார். பின்பு இரவு 7:30 மணிக்கு, அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு, சென்னை திரும்புகிறார்.
 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course