திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை மனதில் வைத்துக்கொண்டு காத்திருந்த இளைஞர் மனைவியின் அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு சரணடைந்துள்ளார். திருமங்கலம் கிராமத்தை சேர்ந்த கிரிஜா என்பவருக்கு பெரியவர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த கவியரசன் என்பவர் கிரிஜாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இதனால் கிரிஜாவின் அண்ணன் கிருபன் ராஜிற்கும், கவியரசனிற்கும் இடையே பகை ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில் பணியாற்றும் கிருபன் ராஜ் அவரது சொந்த ஊருக்கு சென்ற நிலையில் அவரை வழிமறைத்த கவியரசன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சிகிச்சை பலனளிக்காமல் கிருபன் ராஜ் உயிரிழந்தார். கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கவியரசன், அவரது தம்பி கலைவாணன் மற்றும் நிவாஸ் ஆகியோரை தேடி வந்த நிலையில் கவியரசனும், கலைவாணனும் சரணடைந்து விட்டனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







