குமாரபாளையத்தில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் இருவர், சட்டமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்களாக பணியாற்றிய அதிமுக பிரமுகர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட வந்த போலீசார் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், உடந்தையாக இருந்த அவரது தாய் உள்பட 13 பேரை திருச்செங்கோடு மகளிர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இவர்களில் கோபி, கோபாலகிருஷ்ணன் ,சரவணன் ஆகியோர் குமாரபாளையம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியில் செயல்பட்டு வருகின்றனர்.
தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன்பே பாதிக்கப்பட்ட அந்த சிறுமியிடம், நாமக்கல் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் அதிமுக பிரமுகர்கள் இருவரும் ஆளுங்கட்சி பிரமுகர்களின் துணையோடு, இந்த வழக்கிலிருந்து தப்புவதற்கான முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். தேர்தலின் போது இருவரும் அதிமுக வேட்பாளரின் வாக்குச்சாவடி பணியில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் கண்டிப்பான மாவட்ட எஸ்பி நடவடிக்கையால், இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது வெளியாகியுள்ளது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







