
ஆம்பூர் அடுத்த கென்னடி குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(50). இவர் ஒரு தனியார் ஓட்டலில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும் இவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக தனித்து வசித்து வந்தனர். இதன் பிறகு 3 மாதங்கள் கழித்து வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ராமாலையில் உள்ள தனது மனைவி வீட்டுக்கு சென்று வசித்து வந்தார்.
இந்த நிலையில் கோவிந்தராஜ் இறந்து விட்டதாக கூறி உடலை சொந்த ஊரான கென்னடி குப்பத்திற்கு கொண்டு வந்து அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது கோவிந்தராஜின் முகம் சிதைக்கப்பட்டும், கைகள் கட்டப்பட்டும் இருந்த நிலையில், இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதன் பிறகு ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அடக்கம் செய்வதை தடுத்து நிறுத்தினர்.
மேலும் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகத்தின் பேரில் ஆம்பூர் தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







