தமிழகத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு – தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்

 

தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு மல மலவென அதிகரித்து வரும் நிலை காரணமாக பல வகையான கட்டுப்பாடுகள் தமிழ்நாடு அரசு அறிவித்தும் பயன் அளிக்கவில்லை.

 

 

இந்நிலையில் தமிழக அரசு கடந்த 10ம் தேதி அன்று மதக்கூட்டங்கள், வழிபாட்டுத்தலங்கள், திருவிழா கூட்டங்கள், பேருந்துகளில் நின்று பயணம் செய்ய தடை மற்றும்  உணவகங்கள், டீக்கடைகள், வணிக வளாகம் போன்ற  மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 சதவிகித ஆட்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

 

 

தற்போது இன்று ராஜீவ் ரஞ்சன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு இரவு நேர ஊரடங்கு, உடற்பயிற்சி மையங்கள் மற்றும் பூங்காக்களை மூடுவதை பற்றி கலந்தாய்வு செய்தனர்.

 

 

மேலும் தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனாவானது மிகவும் மோசமான நிலை ஏற்படுத்தி வருவதால் விரைவில் இரவு அல்லது வார இறுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என கூறப்படுகிறது. 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course