கன்னியாகுமரி அருகே ஹவாலா பணத்தை மாற்றினால் பல லட்சம் கமிஷன் தருவதாக கூறி பேப்பர் கட்டுகளின் மேல் ரூபாய் நோட்டுகளை ஒட்டி நூதன மோசடிக்கு முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மார்த்தாண்டம் அருகே கஞ்சிக்குழி பகுதியை சேர்ந்த ஜவமணி என்பவரிடம், கும்பல் ஒன்று தங்களிடம் பல கோடி ஹவாலா பணம் இருப்பதாகவும் அவற்றை மாற்றிக் கொடுத்தால் பல லட்சம் கமிஷன் தருவதாக ஆசை வார்த்தைகளில் கூறியுள்ளனர்.

முன்னதாக 18 லட்சம் ரூபாய் கொடுத்தால் அதற்கான ஹவாலா பணத்தை தருவதாக கூறியுள்ளனர். இதை நம்பி ஜவமணி அவர்களிடம் 18 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இதற்கான ஹவாலா பணத்தை தருவதாக கூறிவிட்டு சென்ற அந்த கும்பல் பணத்தை கொடுக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் ஜவமணியை தொடர்புக் கொண்ட அந்த கும்பல் 40 லட்சம் கொடுத்தால் 1 கோடி தருவதாக தெரிவித்துள்ளனர். இதை அறிந்துக் கொண்ட ஜவமணி மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

போலீசாரின் ஆலோசனையின் படி அந்த கும்பலை சிராயன்குழி பகுதிக்கு வருமாறு கூறிவிட்டு ஜவமணி அங்கு சென்றுள்ளார். அத்துடன் அங்கு மாறுவேடத்தில் பதுங்கியிருந்த போலீசார் கும்பலை சுற்றி வளைத்தனர். நான்கு பேர் தப்பி ஓடிய நிலையில் மணிகண்டன் மற்றும் ஜான் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பையை திறந்து பார்த்தபோது பேப்பர் கட்டுகளில் ரூபாய் நோட்டுகளை ஒட்டி வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







