கடலூர் மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் வழங்குவதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் பகுதியில் ஏராளமான ரசாயன தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில், அங்குள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை பாய்லர் ஒன்று வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்குவதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







