காதை கடித்து துப்பிய இளைஞர் – குடி போதையில் ஏற்பட்ட சண்டையால் பரபரப்பு…

 

 

 

     ராஜபாளையம் மலையடிப்பட்டியை அடுத்த எம்.கே.டி நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் மாரியப்பன். ராமமூர்த்தி குடி பழக்கம் கொண்டவர். இவர் ஒருநாள் குடிபோதையில் தனது வீட்டின் முன்பு நின்று தனது தாயையும் சகோதரரையும்  தகாத வார்த்தையில் திட்டி சண்டை போட்டுள்ளார்.

 

 

               அதற்கு மாரியப்பன் இங்கு பெண்கள்,குழந்தைகள்  எல்லாம் உள்ளனர் இப்படி பேசாதீர்கள் என்று  ராமமூர்த்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் குடிபோதையில் இருந்த ராமமூர்த்தி மாரியப்பனின் இடது புற காதை கடித்து துப்பினார். இதனால் படுகாயம் அடைந்த மாரியப்பன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

 

பின்பு, ராமமூர்த்தியையும், அவரது உறவினர்களையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course