திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது மின்கம்பம் சாய்ந்ததில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிகழ்வு அந்த பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இஞ்சிக்குடி பகுதியை சேர்ந்த தர்மராஜ் என்பவர் பூந்தோட்டத்தில் இருந்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பூந்தோட்டம் அருகே சென்ற போது நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதினார்.

இதில் மின்கம்பம் திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் சாய்ந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக தர்மராஜ் உயிர் தப்பினார். மின்கம்பம் சாய்ந்ததில் கடை தெருவில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






